என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்"
- ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
- மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானில் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் கூறுகையில், " ராஜஸ்தானில் 5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை. இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.
அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்" என்று தெரிவித்தார்.
அதேவேளை நேற்று வெளியிடப்பட்ட மேற்குவங்க வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
- இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.
அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.
- பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
- முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள் நீக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, பாஜக மாநில தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டன.
மாவட்ட வாரியாக, திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டன.
இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த மாதம் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது.
- ஆட்டோ சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்க விஜய் தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னம் கேட்கப்பட்ட நிலையில், மோதிரம் சின்னம் த.வெ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
- வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதில், '9-ந்தேதி(நேற்று)வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
- அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.
காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
- SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.
ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.
SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
- அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 98.23 சதவீதம் திரும்பபெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரை தொடர்ந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(SIR) நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் SIR பணிகள் தொடங்கிய நிலையில் வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் 99.81 சதவீதம் பேருக்கு, அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அவற்றில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் அதாவது 98.23 சதவீதம் திரும்பபெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில் 99.93 சதவீத பேருக்கு அதாவது, 10 லட்சத்து 20 ஆயிரத்து 815 கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாவும் அவற்றில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 921 படிவங்கள், தோராயமாக 99.05 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
- குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
- அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன.
குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் திடீர் மரணமும், தற்கொலையும் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணன் (வயது 35) நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பி&டி காலனியை சேர்ந்த சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
- பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு
- பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.
வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.






